திங்கள், 17 அக்டோபர், 2016

   ஆனந்தமாக{கடவுளாக}வாழ்வது எப்படி?


                           ஆனந்தம் என்றால் கடவுள்.
                                                                      
எத்தனை முறை கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றினாய்?
எத்தனை முறை பிரார்த்தனை செய்தாய்?
எத்தனை முறை மந்திரங்களை ஜெபித்தாய்?
எத்தனைமுறை வேதங்களை படித்தாய்?

இதன் அடிப்படையில் ஆனந்தம் கிடைப்பதில்லை.
இவைகள் தேவை இல்லை என்று எண்ணக்கூடாது
இவைகளும் தேவை என்று எண்ண வேண்டும்.
இவைகள் மட்டும் போதும் என்று எண்ணிவிடக்கூடாது.

உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களிலும்
உங்கள் வாயிலிருந்து தோன்றும் வார்த்தைகளிலும்
நீங்கள் செய்யும் செயல்களிலும்

நீங்கள் மற்றவர்களிடம் எந்த அளவுக்கு அன்பாகவும்,
தயவாகவும், கருணையாகவும் நடந்து கொள்கின்றீர்களோ
அதன் அடிப்படையில் ஆனந்தம் இருக்கிறது.

இதற்கு ஒரு எளிய வழி
கண்ணால்  பாருங்கள்.
காதால் கேளுங்கள்.
வாயினால் எதுவும் பேசாதீர்கள்.
எச்செயலும் செய்யாதீர்கள்.

இது முடியாவிட்டால் இதைவிட எளிமையான வழி

எனவே ஆனந்தமாக வாழ நம்முன்னோர்கள் ஆகிய அறிவாளிகளும்,
ஞானிகளும், முனிவர்களும், சித்தர்களும், சில வழிமுறைகளை கூறி
உள்ளனர்.

அவைகள் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை
என இரண்டாக வகுத்து கூறி உள்ளனர்.

இவற்றை பின்பற்றினால் நாம் ஆனந்தமாக வாழலாம்.

நாம் வாழும் உலகைப்பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
உலகத்தில் உள்ளவைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அவைகளின் விபரம்:-  முன்னோர்கள் கூறிய கருத்துக்களில் இருந்து
இவர்களோடு எல்லாவற்றை குறித்தும் பேசுவதை தவிர்க்கவேண்டும். அப்படி
தவிர்க்காவிட்டால்,

பகைமை தோன்றும். பகைமை வளரும்.
இவர்களோடு போராடுவதால்  சோர்வுதான் மிஞ்சும்.
இது நமக்கு வேண்டுமா?

நடந்தவற்றை மறந்துவிடுங்கள்.
நடந்தவற்றை மன்னித்து மறந்துவிடுங்கள்.
அப்படி மறக்காவிட்டால், உங்களுக்கு
கோபமும், அதனல் படபடப்பும், இரத்தகொதிப்பும் ஏற்ப்படும்

பிறர் உங்களை மதிக்க வேண்டும். பாராட்டவேண்டும் என்று
எதிர்பார்க்காதீர்கள்.

இந்த உலகத்தில் உள்ளவர்களில்  பெரும்பான்மையான  மக்கள்
முட்டாள்கள் அகும்.
இந்த முட்டாள் மக்களின் பாராட்டுதலுக்காக இவ்வளவு தூரம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்.
மக்களின் கருத்துகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
மகான்களின் கருத்துகளுக்கும்  பெரியோர்களின் கருத்துகளுக்கும்
முக்கியத்துவம் கொடுங்கள்.


பிறருக்கு  தீர்ப்பளிக்கும்  அதிகாரத்தை  இயற்க்கை உங்களுக்கு
வழங்கவில்லை.
எது நடந்தாலும் அது இயற்க்கையின் அனுமதியோடுதான் நடக்கிறது.

எல்லோரும் அவரவர் விருப்பபடியே இயற்க்கையால்  வழி
நடத்தப்படுகின்றனர்.
இயற்க்கையின் அனுமதியின்றி எதுவும் நடப்பதில்லை.
எனவே எவரைப்பற்றியும் குறை கூறாதீர்கள்.
எல்லாவற்றிலும் பொறுமையையும் சகிப்பத்தன்மையையும்
கடை பிடியுங்கள்.
பணிவுடன் இருங்கள்.

இன்னது இந்த நேரத்தில் இப்படித்தான் நடக்கவேண்டும் என்பதை இயற்க்கை
நிர்ணயம் செய்திருக்கும் போது
அது அது அந்த நேரத்தில் அப்படியே நடக்கும்.
ஒவ்வொரு மனிதனும் அவனின் விதியினாலாயே ஆளப்படுகிறான்.
விதி இருந்தால் உங்களுக்கு நடக்க வேண்டியதை உலகம் முழுவதும் ஒன்று
திரண்டு செயல்பட்டாலும் அதை தடுத்து நிறுத்த முடியாது.
எது நடந்ததோ அல்லது எது நடக்கிறதோ அது அப்படித்தான் நடக்க வேண்டும் என்பது
இயற்க்கையின் திட்டமாகும்.
இந்த நேரத்தில் இன்னது நடக்க வேண்டும் என்பது நடந்தே தீரும்.

திட்டம் போடுவது இயற்க்கைதான் நீங்கள் அல்ல.
உங்களது வாழ்க்கை  உங்களின் முந்தய செயல்களால் நிர்ணயிக்கப்படுகிறது.
உங்களது முந்தய செயல்களை நிர்ணயம் செய்தது விதி ஆகும்.
அந்த விதி என்பதே இயற்க்கையாகும்.


பக்கம்  --2

எல்லாமாய் இருப்பது விதி
விதியை அமைத்தது  மதி
மதியை கொடுத்தது அனுபவம்
அனுபவத்தை கொடுத்தது அறிவு.

அறிவை கொடுத்தது ஒளி
ஒளியை கொடுத்தது உஷ்ணம்
உஷ்ணம் இருந்தது உயிரில்
உயிர் இருந்தது உடம்பில்.

உடம்பால் நடப்பது செயல்.
உடம்பு உண்டானது இயற்க்கையால்.
எனவே செயல்கள் நடப்பதும் இயற்க்கையால்.
செயல்கள் என்றால் கர்மா.

எனவே எல்லாவற்றிற்க்கும் காரணம் கர்மா{செயல்கள்.}
கர்மா கர்மாவை போக்கும். அதாவது
செயல் செயலைபோக்கும் அல்லது மாற்றும்.
முயற்ச்சி என்பது செயலாகும்.


முயற்சி என்னும் செயலால் மற்றொரு செயலை மாற்றவும் முடியும்.
செயலின்றி பயன் இல்லை.
முயற்சியின்றி பயன் இல்லை.
காரணம் இன்றி காரியம் இல்லை.

செய்யாத  தொழிலுக்கு  லாபமும்  நக்ஷ்டமும்  இல்லை.
வாங்காத  கடனுக்கு   வட்டியும்  வழக்கும்  இல்லை.
செய்யாத  செயலுக்கு  இன்பமும்  துன்பமும்  இல்லை.
நிணைப்பற்ற  மனதிற்க்கு  இவை  எதுவுமே  இல்லை.

துன்பத்திற்க்கு காரணம் ஆசைகள்.
ஆசைக்கு காரணம் மனம்.
மனதுக்கு காரணம்  எண்ணங்கள்.
எண்ணங்களுக்கு காரணம் நிணைவுகள்.

நிணைவுகளுக்கு காரணம் முந்தய செயல்கள்.
முந்தய செயல்களுக்கு காரணம் சூழல்கள்.
சூழ்நிலையே செயலுக்கு காரணம்.
சூழ்நிலை இருப்பது இயற்க்கையினால்

இன்பமும் துன்பமும் இயற்க்கையின் அமைவுகள்.
இன்ப துன்பத்திற்க்கு காரணம் பிரச்சனைகள்.
பிரச்சனைகளுக்கு காரணம் செயல்கள்.
செயல்கள் நடப்பது இயற்க்கையாக.

முயற்சி என்னும் செயலால் மற்றொரு செயலை மாற்றவும் முடியும்.
செயலின்றி பயன் இல்லை.
முயற்சியின்றி பயன் இல்லை.
காரணம் இன்றி காரியம் இல்லை.

இயற்க்கையாக நடப்பவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஏற்றுக்கொள்ளாத போதுதான் துன்பம் ஏற்படுகிறது.
நடப்பவற்றை ஏற்றுக்கொள்ளும் போது துன்பம் இல்லை.

இப்படித்தான் நடக்க வேண்டும்  என்று ஆசைபடும் போதுதான்
துன்பம் ஏற்படுகிறது.

நடப்பதை ஏற்றுக்கொண்டு வாழ்வது ஒரு வகை.
இப்படித்தான் வாழ வேண்டும் என்று நிணைப்பது ஒருவகை.

இப்படித்தான் வாழவேண்டும் என்று நிணைத்துவிட்டால்
போராடித்தான் ஆக வேண்டும்.அல்லது,
முயற்ச்சி செய்து தான் ஆகவேண்டும்.

பிறரை பின் பற்ற வேண்டும்.
பிறரைப்போல் வாழ வேண்டும்
என்ற ஆசை மிகவும் சக்தி வாய்ந்தது
இப்படிப்பட்ட ஆசை அறிஞர்களையும், மகான்களையும் கூட
அடிமைபடுத்தி துன்பத்தில் ஆழ்த்திவிடும்.

அமைவுகளாலும்  சூழ்நிலைகளாலும்  அமைந்துள்ளது இயற்க்கை.

இயற்க்கையின் அனுமதியின்றி எச்செயலும் நடக்காது.
எச்செயலும் செய்யமுடியாது.


இயற்க்கையின் அனுமதியின்றி எந்த ஒரு பொருளோ அல்லது செயலோ
நம்மை வந்து அடையாது.
நம்மைவிட்டு நீங்கவும் முடியாது. என்பதை நன்கு உணரவேண்டும்.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும்  இயற்க்கையின் துணை இருக்கிறது என்பதை
உணர்ந்து உங்களுக்கு உள்ளும் , உலகத்துடனும் அமைதியாக வாழ்வதே
நல்ல அறிவுடைய வாழ்வாகும்.