திங்கள், 17 அக்டோபர், 2016



அந்த அந்த கால சூழ்நிலையில்  அவரவர், அவரவர்  தன்மைக்கு ஏற்ப்ப  கண்டதும் கேட்டதும்
உண்மையே.
ஒரு காலத்தில் நிகழ்ந்தது, தற்ப்போதய சூழ்நிலையாலும் அறிவின்மையாலும் அதைசெய்யும்
தகுதியின்மையாலும்,அப்போது நிகழ்ந்தது இப்போது, நிகழாவிட்டால் அதை பொய் என்று
கூற முடியாது.
முடியாதது என்பது எதுவும் இல்லை.நேற்று முடியாதது இன்று முடிந்தது. இன்று முடியாதது நாளை முடியும். முடியாததற்க்கு காரணம் அறிவின்மையும் அனுபவமின்மையுமே ஆகும்.
மனிதன் அறிந்து கொள்ள வேண்டியது எது?
இந்த தேகத்தையும் மூளையையும்  முழுமையாக உபயோகப்படுத்த அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த தேகத்தையும் அறிவையும் சரியாக உபயோகப்படுத்தாமல் வீணாக்குகின்றோம்
சரியாக உபயோகப்படுத்த,
மனதையும் உடலையும் தூய்மையாகவும் அமைதியாகவும் வைத்துக்கொள்ளவேண்டும்.
இதற்க்கு அன்பாகயிருக்கவேண்டும்.மனத்தாலோ,சொல்லாலோ, செயலாலோ யாருக்கும் தீங்கு
நினைக்கவோ, சொல்லவோ, செய்யவோ கூடாதுஇதை எப்போதும் கடைபிடிக்க பயிற்ச்சி செய்ய வேண்டும்.

மனம் எதை விரும்புகிறதோ அதை அடைவதற்க்கு முயற்ச்சிக்கும். ஆதலால்,

தொடக்கூடாததை தொடக்கூடாது,சுவைக்க கூடாததை சுவைக்க கூடாது.
நுகரக்கூடாததை நுகரக்கூடாது. கேட்க கூடாததை கேட்க கூடாது.
பார்க்க கூடாததை பார்க்க கூடாது.சொல்ல தகாததை சொல்லக்கூடாது.
நினைக்க கூடாததை நினைக்க கூடாது.
இப்படி பயிற்ச்சி செய்தால் ஒழுக்கம் ஏற்ப்படும்.இதனால் மன அமைதி கிடைக்கும்.
மன அமைதியினால் நம் கவனமும் லட்சியமும் உறுதி பெறும்.எல்லா காரியங்களும் வெற்றியாகும்.மனம் எப்போதும் புறத்தே  சென்று வியாபித்து அலைந்து உடலின் பலத்தையும்,மூளையின் பலத்தையும் வீணாக்குகின்றது.இவ்வாறு புறத்தே செல்லும் மனத்தை
தன்வசமாக உட்புறமாக திரும்பச்செய்தால் மனம் தன் அதிஅற்புத பேராற்றலை வெளிப்டுத்தும்.
இதை லட்ச்சியம் செய்யாமல், மேலும் மனதை தன் வசமாக வைத்திருந்தால் மனம் மறைந்து  போகும்.மனம் இல்லாத நிலையில் எல்லாவற்றையும், எதுவும் செய்யமுடியும்.மனம் தனக்கு விருப்பமான செயல்களில்  ஈடுபடும் போது நேரம் செல்வது தெரியாது.மனம் தனக்கு பிடிக்காதவற்றைச்செய்யும்போது அல்லது பிடிக்காத சூழ்நிலையில் இருக்கும்போது நேரம் செல்வது மிகவும் தாமதமாகத்தோன்றும்.
இனிய சொல்கூறல்வேண்டும்.
செயல்களில் நேர்மை இருக்கவேண்டும் இவ்வாறு இருந்தால் மனமும் உடலும் அமைதி பெறும்.
ஊழ்வினை என்றால் என்ன? எப்படி செயல்படுகிறது?
பாரம்பரியம் மற்றும் பரம்பரை எனப்படும் DNA செல்களில்  முன்னோர்களின் வாழ்க்கையின் அனுபவங்கள் அறிவாக பதிவாகி உள்ளது  இந்த செல்கள் பலவிதப்பட்ட சூழ்நிலைகளில்வாழ்ந்து தனக்கு தேவையானதுதேவையற்றது என்பதை முடிவுசெய்து அனுபவ அறிவாக பதிவாகி உள்ளது
வாழ்வில் தனக்கு தேவையான நிகழ்வுகள் ஏற்ப்படும்போது  ஏற்றுக்கொண்டு அனுபவிக்கும் திறனும், தேவையற்ற நிகழ்வுகள் ஏற்படும்போது அவற்றை எதிர்த்துசமாளித்து விலக்கும் திறமையையும் DNA செல்களில்பதிவாக்கி வைத்துள்ளது ஆதியில் அணுக்களாக தோன்றி
நீண்டகாலமாக இவ்வாறு பயிற்ச்சி பெற்று அனுபவ வளர்ச்சி பெற்று வந்துள்ளது.
{இதனை சமயங்களிலும், மதங்களிலும் உள்ள சிவபுராணத்தில் கல்லாகி மண்ணாகி கணங்களாகி தேவராகி செல்லாகி நின்ற இத்தாவர  சங்கமத்துள் என்று கூறப்படுகிறது.புராணத்தில் கூறப்படும்
செல் என்பதும் விஞ்ஞானத்தில் கூறப்படும் DNAசெல்  என்பதும் ஒன்றே ஆகும்.}
DNAவில் முன் என்ன அனுவம்அறிவாகபதிவாகிஉள்ளதோஅதன்படியே பெற்றோர்களிடமிருந்து தோன்றும ¢குழந்தைகளுக்கும் உடலின் வடிவம் மற்றும் குணங்கள்அமைவது உண்டு.
ஊழ்வினை=பழயவினை .வினை=செயல் . ஊழ்=பழய, அதாவது பழயசெயல் , முன்செயல் முன்வினை எனப்படும்.
இந்த முன்செயல்கள் [முன் வினை] மூன்று வகைப்படும் அவைகள்;
பெற்றோர்களின் முன்னோர்கள் செய்த செயலின் அனுபவங்கள் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள்     இதற்க்கு பிராரர்த்துவ கர்மம்என்று பெயர்.

பெற்றோர்களின் முன்னோர்கள்அனுபவித்தது போக மீதம் பெற்றோர்களிடம் உள்ள எண்ணங்கள்  மற்றும் சிந்தனைகள்.      இதற்க்கு சஞ்சித கர்¢மம் என்று பெயர்.
பெற்றோர்களிடம்மிருந்து குழந்தைகளுக்கு வந்துள்ள எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள். இவைகள் இன்னும் அனுபவிக்க வேண்டிய செயல்கள் ஆகும். அல்லது செய்ய வேண்டிய செயல்கள் ஆகும்.       இதற்க்கு ஆகாமிய கர்மம் என்று பெயர்.

இவைகள் தற்க்கால சூழ்நிலைக்கேற்ப்ப பழையதில் தேவையானதை ஏற்றும் தேவையற்றதை நீக்கியும் புதியதில் தேவையானதை ஏற்றும் தேவையற்றதை நீக்கியும் விதியாக
{நடக்கவேண்டிய செயல்களாக}அல்லது வழிமுறையாக  அமைத்துக்கொள்ளும் இதுவே  விதி எனப்படும்.

எனவே நான் என்பது பெற்றோர்களின் முன்னோர்கள்{ வழி வழியாக வந்தவர்கள்} மற்றும் பெற்றோர்களின் அனுபவங்கள் மற்றும் எண்ணங்கள், சிந்தனைகளின் மீதம், ஆகும்.

இவ்விடம்  புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றல், நான் என்பதும் நீ என்பதும்
உண்மையில் எதுவும்  இல்லை.இருப்பது யாவும் அதுவே ஆகும்.அது இயற்க்கை எனும் கடவுள்.
அது இயங்குகிறது.எல்லாம் அதன் தன்மை, அதன் சுபாவம ¢என்று அந்த அளவில் புரிந்து கொள்ள வேண்டும்.மனிதன் கடவுளாக வாழ்ந்து காட்ட வேண்டும். இயற்க்கையான மனிதன்
செயற்க்கையாக வாழ்ந்து தன் நற்குணங்களைமறந்து சுயத்தை{இயற்க்கை தன்மையை} இழந்து விட்டான். முயற்ச்சிசெய்து நற்குணங்களில் பழகி, பழகி, மீண்டும் இயற்க்கை நிலையான
இறைநிலையை அடைந்து தானும் இன்புற்று,பிற உயிர்களும் இன்புற உதவ வேண்டும்

எங்குலம் எம்மினம் என்ப தொன்னூற்றா
றங்குலம்  என்றருள்  அருட்பெருஞ்சோதி      திருவருட்பா  அகவல்..வரிகள். ....220

பெற்றோர்களின் மீதியான  ஆசை, எண்ணங்கள், அனுபவங்கள் அடுத்த தலைமுறையினருக்கு
கடத்த படுவதே பிறவி எனப்படும்.
இந்த எண்ணங்களும் அனுபவங்களும் நினைவுகளாக பதிவு செய்யப்படுகிறது.இந்த நினைவுகள் நினைக்கபடும்போது பிறப்பு உண்டாகிறது. நினைவுகள் மறக்கப்படும்போது இறப்பு உண்டாகிறது.{இந்நினைவுகள் ஒளி அலைகளாக பதிவு செய்யப்படுகிறது.}
நினைப்பு உண்டாகிறபோது பிறப்பும்  நினைப்பு நீங்குகிறபோது இறப்பும் உண்டாகிறது.

நினைப்பும் மறப்பும் அற்றால் பிறவி இல்லை. {வள்ளலார்} உபதேசப்பகுதி.

ஒளியினால் ஏற்ப்படும் வாயுக்களின் மீதானஆதிக்கமே, பிரபஞ்ச  தோற்றம் ஆகும். பிராணனின் ஒளிநாட்டமே  பிரபஞ்சத்தோற்றம்
ஒளி இல்லையெனில் விளக்கம் இல்லை.
விளக்கம் இல்லை எனில் அறிவு இல்லை.
இந்நினைவுகள் அறிவாகவும், மனமாகவும் 96 வித இயக்கும் மற்றும்இயங்கும் கருவிகளாக, 96அங்குலமாக உள்ள உடலுல்  அமைகிறது..அவைகள்.,
 தொகுதி.....1
பூதம் ........5 பொறி.......5  புலன்.....5  செயல் உறுப்புக்கள் {கன்மேந்திரியம்}.....5   செயல்கள்{கன்மவிடயம்}.....5 கரணம்.....4  அறிவு.....1  ஆகமொத்தம்......30                                                                                                                                .தொகுதி......2
நாடி......10 வாயு......10   ஆசயம்.....5     கோசம்....5  ஆகமொத்தம்...30
தொகுதி.....3
ஆதாரம்....6   மண்டலம்....3   மலம்....3    தோடம்.....3  ஏடனை.....3   குணம்....3  இராகம்...8
வினை....2   அவத்தைகள்....5   ஆகமொத்தம்.....36. தொகுதி...1.....30
                                                                  தொகுதி....2....30
                                                                  தொகுதி....3....36
                                                                                   -----------
                                                         ஆகமொத்தம்.........   96
                                                                               -----------

தொகுதி.......1
1} பூதம்.....5
  1]  மண்
இயற்க்கை செயல்.வலிந்து இணைத்து நிலைக்கச்செய்யும்.
வடிவு.நாற்க்கோணம். நிறம். பொன்மை. பண்பு கடினம் சுபாவம் கிடத்தல்.
தொழில் ..பொறுத்தல்.
  2]  நீர், புனல், அப்பு, தண்ணீர்
இயற்க்கைச்செயல் குளிர்ந்து பதம் செய்யும். வடிவம்..இரு கோணம்  நிறம். வெள்ளை[படிகநிறம்]
பண்பு...நெகிழ்ச்சி சுபாவம்...பரத்தல்  தொழில்....கட்டுண்டல்.
   3]அனல் , தேயு, நெருப்பு.
இயற்க்கைச்செயல்....சுட்டொன்றுவிக்கும், வடிவு...முக்கோணம், நிறம்...செம்மை, பண்பு..சுட்டொன்றுவித்தல், சுபாவம்...வளவுதல்,தொழில்...உளர்த்தல்.
    4] கனல், காற்று, வாயு.
இயற்க்கைச்செயல்,...சலித்து எவையும் திரட்டும், வடிவம்...அறுகோணம், நிறம்...கருப்பு,
பண்பு..சலித்து திரட்டல், சுபாவம்...நிறைத்தல், தொழில்...விம்முதல்.
     5]ஆகாயம், விசும்பு.
இயற்க்கைச்செயல்...நிரந்தரமாய் இடம் கொடுக்கும், வடிவம்...வட்டம்,   நிறம்...புகைநிறம்
பண்பு..இடம்கொடுத்தல்சுபாவம்....நிற்றல்,   தொழில்...போக்குதல்.
 2}பொறி,,,5
1] செவி...ஆகாயத்தினிடமாக நின்று செவியை பொருந்தி ஒலியை அறியும்.
2] மெய்...காற்றினிடமாக நின்று உடலைப்பொருந்தி  உணர்வு அறியும்
3] கண்... அனலினிடமாக நின்று கண்ணைப்பொருந்தி உருவத்தை அறியும்.
4] நாக்கு..புனலினிடமாக நின்று  நாவில் பொருந்தி ருசி அறியும்.
5] மூக்கு...பிருத்திவினிடமாக நின்று மூக்கில் பொருந்தி வாசனை அறியும்.
3}புலன்கள்...5.
ஐந்து நுண்ணிய பொருள்கள். ஐம்பொறிகளின் உயிர்க்கூறு அல்லது இயக்கமூலம்.
 1]ஓசை...கேட்கப்படுவது.2]ஊறு அல்லது உணர்வு...தொடுதலை அறிவது.
 3]ஒளி...காட்சி, காண்பது.  4]சுவை...அறுசுவை அறிவது. 5] நாற்றம்...வாசனை அறிவது.
4}கன்மேந்திரியங்கள்.....
1]வாய்...ஆகாயத்தினிடமாய் நின்று வாய் வசனிக்கும்.                         
2]கால்...வாயுவினிடமாய் நின்று பாதங்கள் நடக்கும்.
3]கை....அனலினிடமாய் நின்று கை இடுதலும் ஏற்லும் செய்யும்.
4]எருவாய் அல்லது குதம்...அப்புவினிடமாய் நின்று எருவய் மலத்தைக் கழிக்கும்.
5]கருவாய் அல்லது ஆண்குறி...பிருத்திவினிடமாய் நின்று குறி சுக்கிலத்தைக் கழித்து ஆனந்திக்கும்.
5]கண்ம விடயம்....5
இவை,வாய்,கால்,கை,எருவாய்,குறி முதலியவற்றின் உயிர்க்கூறு ஆகும்.இவற்றால் தொழில் புரியப்பட்டவை. அவையாவன.
1]வசனம்....வார்த்தையாடல்.
2]கமனம்....நடப்பது.
3]தானம்.....கொடுக்கல்,வாங்கல்.
4]விசர்க்கம்....மலம் விடுதல்.
5]ஆனந்தம்...மகிழ்தல்.
6}அந்தக்கரணங்கள்....4.அகக்கருவிகள்.
1] மனம்....ஒன்றை நினைப்பது.
2]புத்தி....நினைத்த ஒன்றினை விசாரிப்பது.
3]அகந்தை.அகங்காரம்,முனைப்பு.ஒன்றை நினைத்து, விசாரித்த பின் அதனை மென்மேலும் எழுப்பி ஞாபகப்படுத்தும்
4]சித்தம்...அதனைச்செய்து முடிப்பது.

7}அறிவு.
தன்னைக்கண்டு மகிழ்ந்திருத்தல்.
   மேற்க்கூறிய  பூதம்.....5
                    பொறி...5
         கன்மேந்திரியம்...5
                    புலன்.....5
       .அந்தகரணங்கள்....4
                            ............
              மொத்தம்......24
                            .............
இந்த 24..ம்ஆன்ம தத்துவம் அல்லது அசுத்த தத்துவம் என்று கூறுவர்.அந்தக்கரணம ¢4ல் அறிவு ஒன்றை சேர்த்தும் சித்தம் என்பதை நீக்கியும் கூறுவார்கள் உள்ளனர்.

தொகுதி.....2
1}நாடிகள்....10.
1]இடகலை...வலக்கால் பெருவிரலில் இருந்து கத்தரிக்கோல் மாறலாக இடது மூக்கைப்பற்றி நிற்பது.
2]பிங்கலை...இடக்கால் பெருவிரலில் இருந்து கத்தரிக்கோல் மாறலாக வலது மூக்கைப்பற்றி நிற்பது.
3]சுழுமுனை...மூலாதாரத்தைத்தொடர்ந்து எல்லா நாடிக்கும் ஆதாரமாய், நடு நாடியாய் சிரசளவு முட்டி நிற்பது.
4]சிகுவை...உண்ணாக்கில் நின்று சோறு, தண்ணீரை, விழுங்கச்செய்வது.
5]புருடன்....வலக்கண்ணளவாய் நிற்பது.
6]காந்தாரி....இடக்கண்ணளவாய் நிற்பது.
7]அத்தி...வலக்காதளவாய் நிற்பது.
8]அலம்புடை..இடக்காதளவாய் நிற்பது.
9]சங்கினி....குறியினளவாய் நிற்பது.
10]குரு...அபானத்தளவாய் நிற்பது.

 2}  வாயுக்கள்....10.
1]பிராணன். 2]அபானன். 3]வியானன்.4]உதானன். 5]சமானன். 6]நாகன். 7]கூர்மன்
8]கிருகரன். 9]தேவதத்தன்.10]தனஞ்செயன்.
3}ஆசயங்கள்....5.
1]இரைக்குடல்.{அமர்வாசயம்}
உண்ட அன்னசாரம் அமரும் இடம்.
2]செரிகுடல்.{ பகிர்வாசயம்}
அன்னம் சீரணித்தப்பின் சாரம் வேறு திப்பி வேறாக பிரியுமிடம்அல்லது  அன்னசாரம் பகிருமிடம்.
3]நீர்க்குடல்.{சலவாசயம்}
நீர்க்குழியும் நீர் இறங்குமிடமும்.
4]மலக்குடல்.{மலவாசயம்.}
மலக்குழியும் மலம் இறங்கும் இடமும்.
5]வெண்ணீர்க்குடல்...{.சுக்கிலவாசயம்.}
சுக்கிலம் பிரியுமிடம்.
4}கோசம்.[உடம்பு]....5.
1]உணவுடம்பு,பருவுடம்பு அன்னமயகோசம்.
இது ஏழு[7] உடல் தாதுக்களால் ஆக்கப்பட்டது.
2]வளியுடம்பு, பிராணமய கோசம்.
இது பிராணணும் கன்மேந்திரியங்களும் கூடி செயல்படுவது.
3]மனவுடம்பு, மனோமயகோசம்.
மனமும் ஞானேந்திரியங்களும்[ஐம்பொறிகள்கூடி செயல்படுவது.
4]அறிவுடம்பு[விஞ்ஞானமய கோசம்]
புத்தியும் ,ஞானேந்திரியங்களும்[ஐம்பொறிகள்] கூடி செயல்படுவது.
5]இன்பவுடம்பு,ஆனந்தமய கோசம்.
பிராணவாயுவும்,சுழுத்தியும் கூடி செயல்படுவது.
ஆக மொத்தம் இரண்டாம் தொகுதி......30.
தொகுதி...3.
1}ஆதாரம்...6
  1]மூலாதாரம் 2]சுவாதிட்டானம் 3]மணிப்பூரகம் 4]அனாகதம் 5]விசுத்தி  6]ஆஞ்ஞை [கட்டளை பிறக்குமிடம்]
2} மண்டலம்...3
1]அக்னிமண்டலம் 2]சூரியமண்டலம். 3]சந்திரமண்டலம்.
3}மலம்....3
1]ஆணவம்.
ஆன்மாவின்அறிவை மறைத்து யான் எனது என்பவற்றையும் பிறப்பித்து
தன்உடைமைகள், மனைவி, மக்கள்,பிள்ளை, நனபர் எனும்ஆசையை உண்டாக்கி,
இவைகள் எல்லாம் சேர்ந்து என்னுடையது, என்னுடையது என்று கருதச்செய்வது.
2]மாயை.
வேறொருவர் பொருளை தனதென்று நினைக்கும் இடையூற்றை உண்டாக்குவதும், துன்பத்தை வருவிக்க முயல்வதும், மாயையாகும்.
3]காமியம்.
ஆணவமும்,மாயையும் நிகழ ஒத்து துணையாக நிற்கும்.
கண்டவற்றிற்க்கெல்லாம்ஆசைப்படுதல், நன்மை தீமைகளும், இன்ப துன்பங்களும் ஏற்ப்பட வழி வகுக்கும்.
4}தோடம்...3
1]வாதம் [வாயு.] 2]பித்தம்  [அக்னி.]  3]சிலேத்துமம்.[கபம் அல்லது நீர்]
இவைகளின்  ஏற்ற தாழ்வுகளால் நோய்கள் உண்டாகும்.
5}ஏடனை [முப்பற்றுகள்]
1]பொருட்பற்று[அர்த்தவேடனை]
 பணம்[திரவியம்] தேடி ஆசைப்படுதல்.
2]புதலவர்பற்று.[ புத்திரவேடனை]
பிள்ளைகள்  முதலான சுற்றத்தாரால்வரும் பிணக்கு.
பிள்ளைகளுக்காக ஏங்குதல் என்றும் கூறலாம்.
3]உலகப்பற்று [உலகவேடனை]
உலகத்தில் உள்ள விசயங்களையும்பொருள்களையும் தேடி அலைதல்.
6}குணம்...3[முக்குணம்]
1]சத்துவம்.
அன்பு,அடக்கம், விவேகம் உடையது.
2]இராட்ச்சசம்.
ஊக்கம், ஞானம், வீரம், அறம், தவம், ஈகை, கல்வி, கேள்வி ஆகியவைகளைச்
¢செய்ய   முயற்ச்சியோடு  இருப்பது.
3]தாமசம்.
ஒழுக்கமின்மை, காமம்சினம், கொலை, சோம்பல், நீதிவழுவல், அதிக உறக்கம், அதிக உணவருந்தல்,பொய்,மறதி, வஞ்சகம் முதலிய செயல்களில் ஈடுபடச் செய்வது.
7}வினை...2
 1]நல்வினை
 2]தீவினை.
8}இராகம்....8
1]காமம்......ஆசைப்படச்செய்வது.
2]குரோதம்...பிணக்கு ஏற்ப்படச்செய்வது.
3]உலோபம்...பிடிபாடு.
4]மோகம்....பிரியம்உண்டாகுதல்.
5]மதம்....கர்வம் உண்டாகுதல்.
6]மாற்சரியம்...உட்பகை, உள்ளுக்குள் பகையை வைத்துக்கொண்டு உதட்டளவில் உறவு போல் பேசுதல்.
7]இடும்பை..தானே எல்லாவற்றிலும் தலைவன் என்று நிணைத்துஎல்லோரையும் இகழ்தல்.
8]அகங்காரம்...தன் குற்றங்களை உணராமல், பிறர் சொல்வதைக்கேட்டு கோபித்தல்.
9}அவஸ்த்தைகள்....5.
1]நனவு[சாக்கிரம்.] இது சிரத்தானம், அல்லது புருவமத்தியில்
1,சத்தம், 2,பரிசம், 3,ரூபம், 4,ரசம், 5,கந்தம், என்னும் ஐந்துடனும்,
1,வசனம், 2,கமனம், 3,தானம், 4,விசர்க்கம், 5,ஆனந்தம் என்னும்  ஐந்துடனும்,
மனம்,சித்தம்,புத்தி,அகங்காரம் என்னும் கருவி கரணாதிகள்,நான்குடனும் ஆக மொத்தம் 14.ம் சேர்ந்து,
இப்பதினான்கு கருவி கரணாதிகளுடன் இன்ப துன்பங்களை அறிந்து நிற்க்கும்போது உள்ள நிலை நனவு நிலை ஆகும்.
2]கனவு....சொப்பனம்.
இந் நிலையில் கருவி கரணாதி 14..ல் கரணம் நான்கு நீங்கி, அதாவது 1, சத்தம், 2,பரிசம் 3,ரூபம் 4,ரசம், 5,கந்தம், 6,வசனம், 7,கமனம், 8,தானம், 9,விசர்க்கம், 10, ஆனந்தம். ஆகிய கருவி பத்தும் கண்டத்தில் நிற்க்கும்.
3]உறக்கம்....சுழுத்தி.
இது மற்ற  மனம், சித்தம்,புத்தி, அகங்காரம் முதலிய கரணாதி நான்கும் சீவான்மாவைக்கூடி, சுவாசம் இருதயத்தில் நின்றபோது கண்டவை கேட்டவைகளுள் ஒன்றையும் பிறர்க்கு சொல்ல இயலாத நிலை.
4]பேருறக்கம்.....துரியம்
சுழுத்தியைவிட்டு அந்த கரணங்களுடன் சீவான்மா நாபி[தொப்புள்]த்தானத்தில் நின்றபோது
மூச்சுவிடல் மூச்சுவாங்கல் பிறக்கும் இதற்க்குத் துரியம் என்று பெயர்.
5]உயிரப்படக்கம்....துரியாதிதம்.
கருவி கரணாதி 14..ம் பற்றற்று சீவான்மா தானே மூலாதாரத்தில் சென்றோங்கி, மலம்,மத்தம்,மாய்கை,பரிசங்கள் இவற்றை அறியாமல் நிற்கும் நிலைக்கு துரியாதீதம்என்று பெயர்.


இவைகள் இயங்க காரணமாக இருப்பது சூரிய ஒளியும் காற்றழுத்த மண்டலத்தில் உள்ள அணுக்களும் ஆகும்.மேற்கூறிய 96 விதமான  தத்துவங்களைக்கொண்டு செயல்படும் தன்மை
உடையனவாக  அணுக்கள் இருந்தன.

உடல் எப்படி தோன்றுகிறது?
அணுக்கள் ஒன்று சேர்ந்து செல் ஆனது.
செல்கள்  ஒன்று  சேர்ந்து திசு  ஆனது.{Tissue}
திசுக்கள்  ஒன்று  சேர்ந்து உறுப்பானது{organ}
உறுப்புகள் ஒன்று சேர்ந்து உடலானது.

அறிவு எப்படி தோன்றியது?
இந்த ஒவ்வொரு அணுக்களின்  உள்ளேயும் அறிவு என்னும் ஒளி இருந்தது.
இந்த அறிவின்உள்ளே அனுபவம் என்னும் உணர்வாகிய நாதம்
இருந்¢தது.{.நாதம்....சப்தம்..அதிர்வலைகள்}
அறிவும்  உணர்வும்ஒளியும் சப்தமுமசேரந்துள்ளபோது அக்னியாகும்.
இந்த அக்னியே{ வெப்ப மண்டலமாகி} ஆசையாகி ஆணவமாகி வியாபித்தபோது ஆகாயமானது.

இந்த அக்னி ஆகாயம் முழுவதும்{ வெப்பமண்டலத்தில்} அறிவும், உணர்வுமாகவும்ஒளி, ஓலி அலைகளாகவும், எண்ணங்களாக வியாபித்தது.

எண்ணங்கள் எழுந்தன, வெளிப்பட விரும்பின.
விரும்பின  வெளிப்பட்டு    எண்கள் ஆனது.
எண்கள்  வெளிப்பட்டு   எழுத்து தோன்றின.
எழுத்துகள்  சேர்ந்து சீர்கள்  ஆயின.

சீர்கள் சேர்ந்து அசை ஆயின.
அசைகள் சேர்ந்து வார்த்தை ஆயின.
வார்த்தைகள் சேர்ந்து வாக்கியம்   ஆனது.
வாக்கியங்கள்   சேர்ந்து வாழ்க்கை ஆனது.

இவற்றை நம் முன்னோர்கள் எப்படி உணர்ந்திருந்தனர்?

(ஆரம்பத்தில்) ஆதியில் ஆகாயத்தில் அணுக்களின்  நிலைக்கு பரமநிலை, சிவநிலை என்று பெயர்
இந்த அணுக்கள ¢ஒரே தன்மை உடையதாகவும்  எல்லாம் உடையதாகவும்எல்லாவற்றையும் உண்டாக்கும் தன்மையுடையதாகவும், ஒளி,ஒலி,அக்னிஆகியவற்றை உள்ளடக்கி பிரணவ  நிலையாகவும், எவர் ஒருவராலும் உண்டாக்க படாததும்,எவர் அல்லது எந்த  ஒன்றாலும் உருவாக்கப்படாததும் ஆக இருந்தது.இது இயற்க்கையாகும்இதற்க்கு ஆயிராசன் என்று  பெயர்.ஆயிரசம், அய்ரசன்Hydrogen என்றும்  பெயர்¢  இந்த நிலையில் உருவமற்று நிர்புலமாக  {நிபுலாவாக} இருந்தது. அதாவது வெளிப்படாமலும், புலப்படாமலும் நிர் புலமாக இருந்தது. எங்கும் நீக்கமற நிறைந்து இருந்தது. இவ்வாறு பர நிலையில் அணுக்களிடம் சலனம் தோன்றியது. இது தொடங்கி அணுக்கள் இயங்க ஆரம்பித்ததுஇதனால் மாபெறும் வெடிப்பு தோன்றியது.{சலனம் ஏற்படக்காரணம் அணுக்களின் ஓரின துருவம் விலகியும் எதிரின துருவம் சேரும் தன்மையினால் நெருக்கமும், நெருக்கத்தால் நெம்புதலும் தூண்டலும், இதனால் விலகலும் வெளிப்படுதலும் உள்ள சலனமேற்ப்பட்டது. இதனால் மலர வேண்டிய நிலையேற்ப்பட்டது.மலரந்தது. வெடித்தது நெ...என்றால் நெருக்கம். புலம்...என்றால் புலப்பட்டது. நெபுலம் ...என்றால் நெருக்கத்தினால் வெடித்தது அல்லது புலப்பட்டது.}

இது தொடங்கி அணுக்கள் இயங்க ஆரம்பித்து ஆகாயத்தில் அண்டம் {பிரபஞ்சம்} தோன்றியது.
இயங்கத்தொடங்கியதும் காலமும் தோன்றியது.

இயங்கா நின்ற இயற்க்கை, எங்குமாய் நிறைந்த இயற்க்கை.
இயங்கா நின்ற நிலையில் அதனைச்   சூழ்ந்த    இயற்க்கை.
இதுவே இருள்  எனும் மாயைமாயையும் இயற்க்கையே

இயங்கா நின்ற இயற்க்கை  எங்குமாய்  இயங்காமல் இருந்தபோது  அதனை இருள் சூழ்ந்தது.
இயங்கா நின்ற இயற்க்கையில் இருள்சூழ்ந்து எங்குமாய் நிறைந்தபோது மாயை என பெயரானது.
இயங்கா நின்ற இயற்க்கை அதனுள் இருந்த இயற்க்கை அதனுள் நிறைந்த இயற்க்கை
இதுவே ஆளும் இயற்க்கை எனும் ஆன்ம இயற்க்கையாகும்.
ஆதியில்    இயற்க்கை  இயங்காமல்  அகத்தே ஒளி, ஒலி, அக்னியை உள்ளடக்கி
ஆளும் ஆன்மாவாகவும் பதியாகவும் இருந்தது.இதுவே கடவுள் நிலை ஆகும்.

இயக்கம் இல்லாததால் புறத்தில் இருளாக இருந்தது இதுவே மாயையின் நிலையாகும்.
இறைவனாகிய இயற்க்கை இயங்கும் போது ஒளியாகவும்  இயங்காதபோது இருளாகவும்மிருந்தது.
இயங்கா நின்ற அணுக்கள் அதன் உள்ளே ஒளி வெளியே இருள்.

அணுவின்னுள்ளே ஆளும் ஆன்ம ஒளியும் அணுவின் வெளியே  இருள் என்னும் மாயையும்
அணுவின்னுள்ளே ஆன்மஅறிவு என்னும்உண்மையறிவும் அன்பும் சேர்ந்து கடவுளறிவாகவும்
அணுவின் வெளியே இருளறிவு என்னும்அறிவின்மையும் அன்பின்மையும் சேர்ந்துமருளறிவாகவும்{ மயக்க அறிவு,செயல்புரியாத,அல்லதுசெயல்பட முடியாதநிலை}

அணுவின்னுள்ளே ஒளியுடம்பாகிய நுன்னுடம்பும், இறை அறிவாகிய நுன்னறிவும் கூடியணுக்களிருந்த நிலைக்கு முன்னோர்கள் ஞானநிலை என்றும், பிரமம் என்றும்,
ஆதி இயற்க்கை என்றும், மூலப்பிரகிருதி என்றும், இறைநிலை என்றும் பதிநிலை  என்றும் கூறினர்.

இந் நிலையில் உள்ள அணுக்கள் எங்கும் வியாபித்து பரவும் தன்மையுடையதாகவும்
புலப்படும் தன்மையும் புலப்படுத்தும் தன்மையுடையதாகவும் இருந்தது
இவ்வாறு பிரபஞ்சம்முழுதும் வியாபித்து வெளியெனவும் ஆகாயமெனவும்  இடம் என்றும்  பெயர் பெற்றது.

இவற்றை தொகுத்து கூறினால்

அணுக்கள்
அணுக்களின் இயங்கா நிலை
அணுக்களின் ஆற்றல் மறைந்திருந்த நிலை
அணுக்களின் புறத்தே இருந்த இருள்
இப்படிப்பட்ட அணுக்களினால் நிறைந்த இடம்
அணுக்கள் நிறைந்த இடத்தினால் தோன்றிய வெளி
இதனால் தோன்றிய பேருடம்பு எனும் ஆகாயம்
அதாவது அணுக்களால் நிறைந்த வெளியெனும் ஆகாயம்
ஆகாயத்தில் இருந்த வாயு வாயுவில் இருந்த நெருக்கம்
நெருக்கத்தினால் தோன்றிய வெப்பம் வெப்பத்தினால் உண்டான இயக்கம்
இயக்கத்தினால் தோன்றிய காலம்
காலத்தினால் தோன்றிய கருணை எனும் குளிர்ச்சியான நீர்
குளிர்ச்சியினால் ஏற்ப்பட்ட நிலைப்பு தன்மையுள்ள நிலம்
இவ்வாறு தானும் இயங்கி தன்னை சார்ந்தவற்றை இயக்கும் தன்மையுடைதாக

பிரபஞ்சம் பூரணமாகி நின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக